நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் அமல்…. இனி ரேஷன் கடைகளில் கூடுதல் பொருள்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும்.

இப்படியான நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய உணவு தானிய விநியோக விகிதம் ஜனவரி முதல் அமலுக்கு வருகின்றது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மொத்த உணவு தானியங்கள் அளவு (35 KG) மாறவில்லை. கோதுமையின் அளவு அதிகரிக்கப்பட்டு அரிசி அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல PHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோவுக்கு பதில் 2 கிலோ கோதுமை, 4 கிலோவுக்கு பதில் 3 கிலோ அரிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.