“நீ இனிமே உயிரோடு இருக்கக் கூடாது செத்துடு”… பட்டப்பகலில் கட்டிய மனைவியை குத்தி கொன்ற கணவன்… ஈரோடு அருகே பயங்கரம்….!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் (60) என்பவருக்கும் கருமாண்டிசெல்லி பாளையத்தை சேர்ந்த விஜயா(52) என்பவருக்கும் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் சில நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டன. இதனைத் தொடர்ந்து விஜயா பெருந்துறை கொங்கு நகரில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செங்கோட்டையன் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

இதனிடையே செங்கோட்டையன் தனக்கு சொந்தமான சொத்தை விற்பதற்கு முயன்று உள்ளார். அந்த சொத்தை வாங்க முன்வந்தவர்கள் முதல் மனைவி விஜயாவிடம் இருந்து ஒப்புதல் கையெழுத்து வாங்கி வர வேண்டும் என கூறியதால் செங்கோட்டையன் தனது உறவினர்கள் மூலமாக விஜயாவை தொடர்பு கொண்டு தனது சொத்தை விற்க ஒத்துழைக்குமாறு கேட்டுள்ளார். அதனை ஏற்காத விஜயா தன்னுடைய ஒப்புதல் வேண்டும் என்றால் தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என்று நிபதனை விதித்துள்ளார். ஆனால் விஜயா கேட்ட தொகை அதிகமாக இருப்பதாக கூறி அதனை தன்னால் தர முடியாது என்று செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

   

கேட்ட தொகை தனக்கு வந்தால் மட்டுமே சொத்து விற்பதற்கு கையெழுத்து போடுவேன் என்று விஜயா உறுதியாக இருந்ததால் விஜயா மீது செங்கோட்டையன் ஆத்திரத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பெருந்துறை காஞ்சி கோவில் ரோடு வள்ளலார் வீதி அருகே விஜயா நடந்து சென்று கொண்டிருந்தபோது வந்த செங்கோட்டை என் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள செங்கோட்டையனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.