கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் சனோஜ்குமார் என்பவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ள நிலையில் இந்த தம்பதிகள் சொந்த ஊர் பீகாராகும். தற்போது கர்நாடகாவில் சண்டூர் அருகே உள்ள தொழிற்சாலையில் தம்பதியினர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக பிரியங்காவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த பிரியங்கா கடந்த சனிக்கிழமை காலையில் தன்னுடைய இரண்டு மாத பெண் குழந்தை காணவில்லை என்றும் யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
உடனே வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை தேடும் பணிகள் ஈடுபட்ட நிலையில் குழந்தை கடத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பிறகு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தியதில் அதிகாலையில் தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு பிரியங்கா செல்வதும் வீட்டுக்கு திரும்பி வரும்போது குழந்தை இல்லாமல் வந்த காட்சிகளும் பதிவாகியுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பிரியங்காவை பிடித்து விசாரித்த போது தன்னுடைய குழந்தை கடத்தப்படவில்லை தானே கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அவரை கைது செய்ததில் மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததால் இரண்டு மாதங்களை ஆன அந்த குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்தது தெரிய வந்தது. பிறகு கால்வாயில் இருந்து பச்சிளம் குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…