உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண் குழந்தைகள் உள்ளார்கள். கணவர் இறந்துவிட்ட நிலையில் இவருக்கு ஆஷிக் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இவர்கள் சந்தித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளார்கள். அதற்கு குழந்தைகள் இடையூறாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்து அவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்கள். இதனையடுத்து கடந்த வருடம் ஒரு நாள் தங்கள் ஊருக்கு அருகே உள்ள ஆற்றங்கரைக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று ஈவு இரக்கமில்லாமல் நான்கு குழந்தைகளையும் தூக்கி வீசி உள்ளார்கள்.
இதில் மாதவ் (6) ஆதித்யா (4 ) மங்கள் (2) ஆகிய மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மூத்த மகனான சோனு(9) அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரியங்காவையும் அவருடைய காதலரையும் கைது செய்துள்ளார்கள். விசாரணையின் முடிவில் குழந்தைகளை கொன்ற தாய் பிரியங்காவிற்கு தூக்கு தண்டனையும், ஆஷிசுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
