மகளை வேறு பள்ளிக்கு மாற்ற TC கேட்ட விவசாயி… மீதி கல்விக்கட்டணம் கட்ட சொல்லி அடித்தே கொன்ற தாளாளர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

By Soundarya on ஆடி 12, 2025

Spread the love

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாத்  ஷெங்டி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தன்னுடைய மகளை சேர்த்துள்ளார். கடந்த சில வருடங்களாக தன்னுடைய மகள் அந்த பள்ளியில் படித்து வந்த நிலையில் வேறு பள்ளியில் படிக்க வைக்க நினைத்துள்ளார் ஜெகநாத். இதற்காக கடந்த வியாழக்கிழமை அன்று அந்த பள்ளிக்கு சென்றுள்ளார். தனது மகளை வேறு பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும், செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படியும், மகளின் சான்றிதழ்களை திருப்பி கொடுக்கும்படியும் பள்ளி தாளாளரிடம் கேட்டுள்ளார்.

அப்போது கட்டணத்தை திருப்பி கொடுக்க முடியாது எனவும் மாணவி இன்னும் சில கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் தாளாளரும் அவருடைய மனைவியும் கூறியுள்ளார்கள். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாளாளரும் அவருடைய மனைவியின் சேர்ந்து ஜெகநாதத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் ஜெகநாத் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.