உத்திரபிரதேசம் மாநிலம் ஹைதராஸ் மாவட்டம் சிக்கந்தர் கிராமத்தை சேர்ந்த பிங்கி சர்மா (33) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 6 வயதில் பெண் குழந்தை இருந்தது. இதனிடையே பிங்கி சர்மாவுக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி தொடர்ந்து உல்லாசமாக இருந்துள்ளனர். சிறுநீர் பள்ளிக்குச் சென்று விடும் விலகியில் வீட்டில் கணவர் மற்றும் மாமியார் இருவரும் இல்லாத போது பிங்கி ஷர்மா தனது கள்ளக்காதலனான 17 வயது சிறுவனை அழைத்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிவா மற்றும் அவருடைய தாய் உறவினர்களின் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் வழக்கம் போல சிறுவனை வீட்டுக்கு அழைத்து பிங்கி சர்மா தனிமையில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறு மீ இதனை பார்த்துவிட்டு தனது தந்தையிடம் தெரிவித்து விடுவதாக கூறியுள்ளார். இதனால் எங்கு தனது தகாத உறவு கணவர் மற்றும் மாமியாருக்கு தெரிந்து விடுமோ என்று பயந்து போன பிங்கி ஷர்மா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆறு வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டில் இருந்த சாக்கு முட்டையை எடுத்து குழந்தையின் சடலத்தை மூட்டையில் கட்டி அருகில் இருந்த கிணற்றில் வீசியுள்ளார். பிறகு வீட்டுக்கு வந்த சிவா இரவு ஒன்பது மணி அளவில் சிறுமியை காணவில்லை என்று தேடிய நிலையில் போலீசில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை தேடிய போது கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சாக்கு முட்டையை பிரித்துப் பார்த்தபோது சிறுமி கழுத்தில் துணியால் இறுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. உடனே வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியதோடு அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலுடன் சேர்ந்து தாயே பெற்ற மகளை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிங்கி மற்றும் அவரது காதலனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
