2026 தேர்தல்… எந்த கட்சியுடன் கூட்டணி?… முடிவை அறிவித்த விஜய்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முதமாக நடந்து கொண்டிருக்க மறுபக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திமுக மற்றும் பாஜகவை தவிர தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்று தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் சமீபத்தில் விஜயை சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் இறுதியில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக்கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் மாற்றுத் திட்டங்களுக்கு திமுக தயாராகி வருவதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.