கோவை மாவட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது கொளத்தூர் தொகுதியில் 4373 போலி வாக்காளர்கள் அந்த தொகுதியில் மட்டும் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். 913 வாக்காளர்கள் போலி முகவரியில் உள்ளார்கள். ஒரே பெயரில் மூன்று வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளார்கள். 30 வாக்காளர் அட்டை ஒரே முகவரியில் உள்ளது. இதை சரிபார்த்த போது 5964 வாக்காளர்கள் போலியாக உள்ளார்கள்.
என்று மூன்று கணக்குகளை நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் போலி வாக்காளர்கள் என்று மூன்று கணக்குகளை என்று கூறி இருக்கிறார். அதில், 933 என்பதை தொள்ளாயிரத்து நூத்தி முப்பத்தி மூனு என்று கூறியது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையவாசிகள் ஒரு நாட்டின் நிதி அமைச்சருக்கு கணக்கு தெரியவில்லையா? இவர் எப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்? என்று கேலி செய்து வருகிறார்கள்.
