வீட்ல கொசு தொல்லை அதிகமா இருக்கா?… இதோ இந்த சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க… இனி உங்க வீட்டு பக்கமே எட்டி பாக்காது…!

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் கொசுக்கடியும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எத்தனை கொசு விரட்டிகள் சுருள்கள் பயன்படுத்தினாலும் காலை, பகல் மற்றும் இரவு என எப்போதும் சுற்றி வந்து நோய்க்கிருமிகளை பரப்புவதில் கொசு முக்கிய பங்காற்றுகிறது. இதனால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. கொசு சுருள் மற்றும் திரவம் என இவற்றை நாம் வீட்டுக்குள் சுவாசிக்கும் போது இதன் மூலமாக நமக்கு சுவாச பிரச்சனை மற்றும் பல்வேறு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே நம் உடலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வீட்டில் இருக்கின்ற இயற்கை பொருட்களை வைத்து எவ்வாறு கொசுக்களை விரட்டலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கொசுக்களை விரட்டுவதற்கு பூண்டு மிக சிறந்த பொருள். இதில் இருந்து வருகின்ற வாசனை கொசுக்களை விரட்டியடிக்கும். இதற்கு ஐந்து முதல் 10 பூண்டு துண்டுகளை எடுத்து ஒரு சிறிய பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதனுடன் இந்த பூண்டு துண்டுகளை சேர்த்து கலக்க வேண்டும். இப்போது இந்த கரைசலை வீடு முழுவதும் தெளித்தால் கொசுத்தொல்லை இருக்காது.

   

கற்பூரத்தின் வாசனைக்கு கொசுக்கள் வராது. வீட்டின் கதவுகளை மூடிவிட்டு கற்பூரம் ஏற்ற வேண்டும். கற்பூரத்தை ஏற்றி அரை மணி நேரம் கழித்து எல்லா கதவு மற்றும் ஜன்னல்களை திறக்க வேண்டும். கற்பூர வாசனை கொசுக்களை ஈர்க்காது. இதனால் கொசு வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு இல்லை.

   

நம் சருமத்தில் ரசாயனங்கள் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதில் வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம். இதனை சருமத்தில் நேரடியாக தடவாமல் தண்ணீர் கலந்து கை, கால்களில் தடவலாம். வெளியே தெரியும் உடல் பாகங்களில் தேய்க்கலாம். இப்படி செய்தால் கொசுக்கள் நம் அருகில் வராது.

 

எலுமிச்சை பழத்தை பயன்படுத்தியும் கொசுக்களை விரட்ட முடியும். கிராம்பில் எலுமிச்சை சாறு சேர்த்து வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் துளசியை நன்றாக அரைத்து சாறு தயார் செய்து வைத்து அந்த சாற்றை ஒரு பாட்டிலில் அடைத்து அதனை தினமும் காலை மாலை கொசு விரட்டும் தெளிப்பானாக நீங்கள் பயன்படுத்தி வரலாம்.