நீ எல்லாம் ஒரு பொம்பளையா?… 3 வயது மகளின் பிறப்புறுப்பில் சூடு வைத்து, கள்ளக்காதலனை அப்பா என அழைக்க சொல்லி துன்புறுத்திய தாய்.. இறுதியில் நடந்த பயங்கரம்…!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (30) என்பவருக்கும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குயவன் மேடு கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது ஆகும் நிலையில் குழந்தை பிறந்தவுடன் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சௌந்தர்யாவை பிரிந்து கணவன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெங்கடேசன் எங்கு சென்றார் என்று தெரியாமல் அவருடைய உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் வெங்கடேசனுக்கு கடன் கொடுத்த அனைவரும் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என தினமும் சௌந்தர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.

அதேபோல வெங்கடேசன் அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்த நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்ற இளைஞரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனந்தன் கடன் தொகையை கேட்டு அடிக்கடி சௌந்தர்யா வீட்டுக்கு வந்து சென்ற நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் சௌந்தர்யா தனது குழந்தையை அழைத்துக் கொண்டு திருச்சி செல்வதாக தனது தாய் மாரிமுத்து என்பவருக்கு போன் மூலம் தகவல் கூறிவிட்டு வெங்கடேசன் எடுத்து வந்த காரில் தனது மகளை அழைத்துக் கொண்டு திருச்சிக்குச் சென்றுள்ளார்.

பிறகு அங்குள்ள பேருந்து நிலையம் பகுதியில் இனிமே நீ வெங்கடேஷனை அப்பா என்று தான் கூப்பிட வேண்டும் என்று சௌந்தர்யா தனது மூன்று வயது மகளிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது மகள் மறுப்பு தெரிவித்ததால் கோபம் அடைந்த சௌந்தர்யா தனது மூன்று வயது மகளை அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் ரூம் புக்கிங் செய்து இருந்த வெங்கடேசன் அங்கு சௌந்தர்யா மற்றும் அவரது மகளை அழைத்துக்கொண்டு இரவு தங்கியுள்ளார். அப்போது வெங்கடேசன் மூன்று வயது சிறுமியின் உடலில் பல இடங்களில் அடித்த உதைத்த நிலையில் சௌந்தர்யா தனது மகளின் பிறப்புறுப்பில் சூடு வைத்ததாக சொல்லப்படுகிறது.

பிறகு மறுநாள் அதிகாலை 3 வயது பெண் குழந்தையின் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வீட்டில் விட்டுவிட்டு வெங்கடேசன் சென்றுள்ளார். இந்த நிலையில் சௌந்தர்யா அந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு தன் மகளை அனுப்பியுள்ளார். அங்கு சிறுமி தொடர்ந்து அழுவதால் உணவு வழங்கிய போது அவரது முக கவசத்தை அங்கன்வாடி ஊழியர் கழட்டிய போது உதடு பகுதியில் காயம் இருப்பதை கண்டு சிறு நீளம் விசாரித்த போது நடந்ததை சிறுமி கூறி உள்ளார்.

இது குறித்த உடனே தகவல் அறிந்து வந்த சௌந்தர்யாவின் அம்மா சௌந்தர்யாவின் இளைய சகோதரி உடன் நேரில் வந்து பார்த்து சௌந்தர்யாவிடம் கேட்டபோது தாய் மற்றும் சகோதரியை அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை தொடர்ந்து சௌந்தர்யாவின் தாய் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சௌந்தர்யா மட்டும் வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

9 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

11 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

16 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

21 minutes ago

“தங்கத்தை உடனே விற்றுவிடுங்கள்”… ஆனந்த் சீனிவாசன் சொன்ன அந்த ‘ஒரு’ விஷயம்.. அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குபவர்களுக்கு ஷாக்…!

தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க 'கோல்ட் பீஸ்' (Gold…

21 minutes ago