தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலியுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்தார். இதனால் அதிமுகவில் இருந்து அவரை நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் தனது எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்த செங்கோட்டையன் சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிகள் இணைந்தார்.
இந்நிலையில் செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் வருகின்ற நவம்பர் 30 அதாவது நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கின்றார். இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கோபிசெட்டிபாளையம் முத்து மஹால் திருமண மண்டபம் அருகே நாளை மாலை ஐந்து மணி அளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை கோபிசெட்டிபாளையம் பகுதியில் இபிஎஸ் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீட்டப்பட்டதற்கான காரணத்தை நாளை விரிவாக பேச இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக தலைமைக்கு எதிராக செங்கோட்டையன் பேசியதன் பின்னணியில் உள்ளவர்களின் விவரங்களையும் வெளியிட இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…