ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜலந்தர்பாலியர் சிங், மனைவி சுபத்ரா மல்டிசோ. கடந்த ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, சுபத்ராவை ஜலந்தர் கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து கிராமத் தலைவரிடம் முறையிட்டனர். சுபத்ரா தனது தாய் வீட்டில் சில மாதங்கள் இருக்கும்படி அவர்கள் அறிவுறுத்தினர். தனது தாய் வீட்டில் சுபத்ரா வசித்து வரும் நிலையில், ஜலந்தர் மீது குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வியாழக்கிழமை இரவு, ஜலந்தர் தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்பொழுது சுபத்ராவின் தாயாருக்கும், ஜலந்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சுபத்ரா, அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து ஜலந்தரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் வியாழக்கிழமை இரவு முழுவதும், ஜலந்தரை மின்கம்பத்தில் கட்டிவைத்து கொடுமைப்படுத்தினர். மறுநாள் காலை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஜலந்தரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
