மன்னார்குடி அருகே எடமேலையூரைச் சேர்ந்த இளஞ்சியம் (45). இந்த பெண்ணுக்கு அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டியன் (41) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதால், இளஞ்சியம் தனது கணவரைப் பிரிந்து மூன்று மகன்களுடன் தங்கபாண்டியனுடன் திருப்பூரில் பத்து ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இளஞ்சியத்தின் மூத்த மகன் அரவிந்தராஜ் (25), அதே நிறுவனத்தில் வேலை பார்த்த சினேகாவை (23) திருமணம் செய்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு அரவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டார். மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முடிந்த பிறகு, இளஞ்சியம், தங்கபாண்டியன், மருமகள் சினேகா மற்றும் அவரது குழந்தை ஆகிய நால்வரும் கடந்த நவம்பர் 18ஆம் தேதி எடமேலையூருக்கு வந்துள்ளனர்.
சினேகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாலும், அவர் தனியாகக் குடித்தனம் செல்ல விரும்புவதாலும், இளஞ்சியமும் தங்கபாண்டியனும் சினேகாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். கடந்த நவம்பர் 20ஆம் தேதி இரவு, திருப்பூருக்குச் செல்ல வேண்டும் என சினேகா கூறியதால், தங்கபாண்டியன் அவரை மன்னார்குடி பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார்.
இதற்கிடையே சினேகாவை காணவில்லை என அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் தங்கபாண்டியனிடம் நடத்திய விசாரணையில், எடமேலையூரில் வைத்து இளஞ்சியத்துடன் சேர்ந்து சினேகாவை அடித்துக் கொன்று, அவரது உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி சோனாப்பேட்டை வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சினேகாவின் உடலை மீட்டு, இளஞ்சியம் மற்றும் தங்கபாண்டியனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…