உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் தர்பன் சாவ்லா. இவரது மனைவி சாக்ஷி. இந்த தம்பதியினருக்கு 11 வயதுடைய தக்ஷி என்ற மகன் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சாக்ஷி தனது மகனுடன் 13-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக ஒரு கடிதத்தில் இந்த உலகை விட்டு செல்ல விரும்புகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மனநல பிரச்சனையால் மகன் பாதிக்கப்பட்டிருந்ததால் சாக்ஷி இந்த விபரீதம் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
