BREAKING: அதிமுக ஒன்றிணைப்பு… திடீரென முடிவை மாற்றிய இபிஎஸ்… சற்றுமுன் முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 14, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன.

அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் நீக்கம், மாற்றம் குறித்த அறிவிப்புகளை இபிஎஸ் ஜெயலலிதா பாணியில் வெளியிட்டு வருகின்றார். கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து பேசுவோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார்.

   

இந்நிலையில் நாளை மறுநாள் இபிஎஸ் டெல்லி செல்வதால் தர்மபுரி சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் தொடர்பாக செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் இபிஎஸ் டெல்லி செல்ல உள்ளார். இதனால் அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. தர்மபுரி மாவட்ட சுற்றுப்பயணம் வருகின்ற செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளுக்கு பதில் செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.