தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து இரண்டு புயல்கள் உருவாகும் என்று கூறியுள்ளனர். நடைபாண்டியில் அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் பருவ மழை தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பருவ மலைக்கு முன்பு வடிகால் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இயல்பை விட இந்த வருடம் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த செய்தி சென்னை உள்ளிட்ட கடலோர மக்களுக்கு பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
