சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி என்பவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சிந்தாமணி. நல்லசாமியும் அவரது நண்பரான சந்திரன் என்பவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரட்டை கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 16 மாதங்களுக்கு முன்பு இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் சந்திரனுக்கும் சிந்தாமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் சந்திரன் நல்லசாமியின் வீட்டிற்கு சென்று சிந்தாமணியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நல்லசாமி தனது மனைவியுடன் சந்திரன் படுக்கையில் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் கோபத்தில் அங்கிருந்த இரும்பு ராடால் சந்திரனின் தலையில் ஓங்கி அடித்து அவரை கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நல்லசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
