BREAKING: திடீரென முடிவை மாற்றினார் இபிஎஸ்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

By Soundarya on புரட்டாதி 14, 2025

Spread the love

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்சாவை நேரில் சந்தித்து பேசியதாக கூறி இருந்தார். அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்பது அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் தொடர்பாக, செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், EPS-ம் நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளார். இதனால், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்ட சுற்றுப்பயணம் வரும் 17, 18 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 28, 29-ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.