வெயிலின் கொடுமை தாளாமல் குரங்குகள் செய்த கலாட்டா குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், தண்ணீர் தொட்டியை ஆக்கிரமிக்க குரங்குகள் ஒரு கூட்டத்தையே கூட்டியுள்ளன. தங்களுக்குச் சொந்தமான நீச்சல் குளம் போல அந்த மொட்டை மாடி தண்ணீர் தொட்டிக்குள் புகுந்து அவை குளித்து மகிழ்கின்றன. ஒன்று தொட்டிக்குள் சொகுசாகக் குளிக்க, மற்றொன்று வெளியில் பாதுகாப்பிற்கு நிற்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஏசி வசதி இல்லையென்றாலும், மொட்டை மாடித் தொட்டியே போதும் என முடிவெடுத்த குரங்குகளின் இந்தச் செயல் வேடிக்கையாகப் பகிரப்பட்டு வருகிறது. குரங்குகள் குளிப்பதால் தொட்டியில் உள்ள நீர் வீணாவதாகவும், அவற்றுக்கெனத் தனியாகக் கோடை காலத்தில் சிறிய குளங்களை அமைக்கலாம் என்றும் சமூக வலைதளவாசிகளிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. வெயிலை விரட்ட மனிதர்களை விடக் குரங்குகளே புத்திசாலித்தனமாகச் செயல்படுவதாகப் பதிவிட்டவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
गर्मी ऐसी पड़ रही है कि अब बंदरों ने भी मीटिंग बुला ली 🐒🔥
एजेंडा साफ था — “पानी की टंकी पर कब्ज़ा!” 😂
छत की टंकी में ऐसे घुस-घुस के नहा रहे हैं
जैसे society का मेंबरशिप कार्ड इनके नाम हो 💦😆एक अंदर स्पा ले रहा है, दूसरा बाहर सिक्योरिटी बनकर खड़ा है 🤣
लगता है इंसानों से… pic.twitter.com/Q1KeS0qSiD
— Surendra Yadav (@Surendr0032083) April 24, 2026
