உடுப்பியின் மணிப்பால் பகுதியில் இளஞ்சோடிகள் இருவர் பொது இடத்தில் முத்தமிட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் இத்தகைய அநாகரீகச் செயலை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள், அவர்களைக் கண்டித்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஒருவர் கன்னட மொழியில் அவர்களைச் சாடியபோது, அந்த இளைஞர் அவரிடம் ஹிந்தியில் பேசுமாறு கூறியது வாக்குவாதத்தை இன்னும் தீவிரமாக்கியது. ஆனால், அந்த நபர் ஹிந்தியில் பேச மறுத்து தொடர்ந்து கன்னடத்திலேயே அவர்களை எச்சரித்துள்ளார்.
இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பொது இடங்களில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பொது இடங்களின் மாண்பைக் குறைக்கக்கூடாது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருவதால், இணையத்தில் இது குறித்துப் பெரிய விவாதம் எழுந்துள்ளது. இறுதியில் அந்தச் சோடிகளும் அங்கிருந்த மக்களும் கலைந்து சென்றனர்.
In Udupi’s Manipal, a young couple allegedly engaged in inappropriate public behavior by kissing each other on a road.
Locals who witnessed the incident reportedly objected and reprimanded them in Kannada, stating that such behavior is not acceptable in public places.
When one… pic.twitter.com/Jqd8aBomPp
— Hate Detector 🔍 (@HateDetectors) April 24, 2026
