குஜராத்தில் நடந்த 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறையில் குரங்கு ஒன்று திடீரென நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் உள்ள ஒரு அரசு அரங்கில் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக உள்ளே நுழைந்த குரங்கு அங்கிருந்த மேஜைகள் மற்றும் நாற்காலிகள் மீது தாவி ஓடி அமர்க்களம் செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இந்த அசாதாரணமான சம்பவத்தின்போது, அங்கிருந்தவர்கள் குரங்கை விரட்ட முயன்றனர். ஆனால், அது பயப்படாமல் அதிகாரிகளின் கோப்புகள் மற்றும் கணினிகளை ஆய்வு செய்வது போல மேஜை மீது அமர்ந்திருந்தது. இந்த கலகலப்பான மற்றும் விசித்திரமான காட்சியை அங்கிருந்த ஊழியர் ஒருவர் தனது மொபைல் போனில் படம்பிடித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற ஒரு தீவிரமான கூட்டத்தில் குரங்கின் இந்த “திடீர் ஆய்வு” அங்கிருந்தவர்களை ஒருபுறம் பதற்றமடையச் செய்தாலும், மறுபுறம் வேடிக்கையாகவும் அமைந்தது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. “இந்த குரங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனது பெயரைச் சேர்க்க வந்துள்ளது போல”, “ஆவணங்களைச் சரிபார்க்க வந்த புதிய அதிகாரி” எனப் பலரும் இணையத்தில் விதவிதமாகவும் நகைச்சுவையாகவும் கமெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குரங்கின் வீடியோ தற்போதைய இணையதள ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…