தமிழ் திரையுலகில் 20-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தும், ‘நம்ம கிராமம்’ போன்ற தேசிய விருது பெற்ற படங்களை இயக்கியும் கொடிகட்டிப் பறந்தவர் மூத்த நடிகர் மோகன் சர்மா. ஒரு காலத்தில் சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டிற்கு அருகிலேயே பிரம்மாண்டமாக வாழ்ந்த இவர், நடிகை லட்சுமியை மணந்து பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். ஆனால், சினிமாவில் ஏற்பட்ட கடுமையான கடன் பிரச்சனைகளாலும், வயது மூப்பாலும் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்.
தற்போது உடலநலக் குறைவு காரணமாக மாத்திரை வாங்கக்கூடக் கையில் காசில்லாததால், வேறு வழியின்றி கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலவச முதியோர் இல்லத்தில் தங்கி வாழ்ந்து வருகிறார். இவரது மகன் வெளிநாட்டில் வசித்து வரும் சூழலில், தாம் கடுமையான கஷ்டத்தில் இருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ. 1 லட்சம் அனுப்பித் ரகசியமாக உதவியதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார். ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த மூத்த கலைஞரின் இந்த பரிதாப நிலை ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
