கேரளாவில் இருந்து தமிழ் திரை உலகில் நுழைந்து சாதித்த நடிகைகளின் பட்டியலில் முன்னணியில் இருந்தவர் அசின். அசின் இருந்தவரை தமிழ் சினிமாவில் அவர்தான் முதன்மையான நடிகராக இருந்தார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தைத் தவிர மற்ற முன்னணிக் கதாநாயகர்களோடும் அவர் படம் பண்ணிவிட்டார்.
இவர் முதன்முதலாக கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் அவர் நடித்த உள்ளம் கேட்குமே, கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதாரம், வேல் என அனைத்துப் படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்கள்தான்.
முருகதாஸ் கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்த போது அதில் தமிழில் நடித்த கதாநாயகி வேடத்தை அசினையே இந்தியிலும் நடிக்க வைத்தார். அந்த படம் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை இந்தி திரையுலகில் கொடுத்தது. அதனால் அங்கு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் அடுத்த ஸ்ரீதேவி என்றெல்லாம் அவர் புகழப்பட்டார். ஆனால் அவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே விலகிவிட்டார்.
தமிழில் அசின் நடித்ததே மொத்தம் 11 படங்கள்தான். அதில் 10 படங்கள் ஹிட். ஒரே ஒரு படம் மட்டுமே தோல்விப் படம். அது அஜித்தோடு அவர் நடித்த ஆழவார் திரைப்படம். அதே போல வேல் மற்றும் மஜா ஆகியவை சுமாரான ஹிட். மற்ற எல்லா படங்களுமே மிகப்பெரிய ஹிட் படங்கள்தான். தமிழ் நடிகைகளிலேயே அதிக வெற்றி சதவீதம் கொண்ட நடிகையாக இருந்த அசின் தொடர்ந்து நடித்திருந்தால் இன்று தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படும் நயன்தாராவுக்கு இணையாக இருந்திருப்பார்.
இந்நிலையில் அசின் தமிழில் முதல் முதலில் அறிமுகமான ‘எம் குமரன் S/o மகாலெட்சுமி படத்தின் ரி ரிலீஸ் சமயத்தில் இயக்குனர் மோகன் ராஜா அவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமானத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “வழக்கமாகத் தயாரிப்பாளர்கள்தான் நடிகர்களிடம் அக்ரிமெண்ட் போடுவார்கள். ஆனால் அசின் வரும்போதே ஒரு அக்ரிமெண்ட்டோடு வந்தார். நான் எந்த காரில் வருவேன். எந்த ஹோட்டலில் தங்குவேன் என்றெல்லாம் ஒரு பட்டியலோடு வந்தார். ஆனால் ஷூட்டிங் தொடங்கியதும் அவர் கொடுத்த ஒத்துழைப்பு நம்ப முடியாதது. அந்த அளவுக்கு சிறப்பான நடிகை. அவர்களின் பூர்விக தோட்டங்களில் எல்லாம் நாங்கள் ஷூட் செய்தோம்” எனக் கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தக மற்றும் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று சீனாவுக்கான…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…
இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…
கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…
ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…
விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…