Categories: சினிமா

படத்தின் கதையை கேட்டதும் உடனே தாடியை எடுத்துக் கொண்ட ஜெயப்பிரகாஷ்.. காரணம் இதுதானா..?

Spread the love

தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அனைத்திலும் பொருந்தக்கூடிய ஒரு நடிகர் தான் ஜெயப்பிரகாஷ். பல திரைப்படங்களில் சிறப்பாக சிறப்பு தோற்றங்களில் தோன்றியவர். ஒரு சொக்கலிங்கம் வாத்தியாராக இருக்கட்டும் ஜூடோ டாக்டராக இருக்கட்டும் ஒரு பிரகாசம் அப்பாவாக இருக்கட்டும் அல்லது பண்ணையாராக இருக்கட்டும் இவர் சிறப்பாக பண்ண கேரக்டர்கள் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர் தான் ஜெயப்பிரகாஷ். மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த இவர் தினமும் ரயில் மூலம் கிராமத்தில் இருந்து பயணித்து வந்து படித்து வந்தார்.

மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லாத காரணத்தால் படிப்பை நிறுத்திக் கொண்டு முதலில் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவருக்கு நிரஞ்சன் மற்றும் துஷ்யந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது விடாத ஆர்வத்தால் சீர்காழியில் இருந்து சென்னை வந்து ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு கசியின் பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். இவரது விடாமுயற்சியால் நண்பர்கள் மற்றும் குடும்ப உதவையுடன் பெட்ரோல் பங்க் கொன்று தொடங்கி சென்னையில் 3 பெட்ரோல் பங்குகளை ஆரம்பித்தார். முதன் முதலில் 1995ஆம் ஆண்டு தெலுங்கில் மிக வெற்றி படமான தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா நடித்த சிசின்றி என்ற படத்தை தமிழில் டப் செய்து சுட்டிக் குழந்தை என்ற பெயரில் படத்தை இவர் தயாரித்தார்.

 

இதனைத் தொடர்ந்து தற்போது வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் தயாரிப்பாளராகவும் இணை தயாரிப்பாளராகவும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். இவர் முதல் முறையாக 1997 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகருமான சேரனின் பொற்காலம் என்ற திரைப்படத்தில் தயாரிப்பாளராக இருந்தார். அதன் பிறகு சேரனுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக 2007 ஆம் ஆண்டு வெளியான மாயக்கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் மிகச் சிறந்த கதாபாத்திரம் இவருக்கு கிடைத்த நிலையில் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்க அழைப்பதற்கு சேரன் நீங்க நான் சொல்றத பண்ணா மட்டும் போதும் பெருசா எதுவும் அடிக்க வேண்டாம் என்று சொல்லித்தான் இவரை நடிக்க அழைத்து வந்துள்ளார்.

அப்படித்தான் அந்த படத்தில் நடித்தார். அதன் பிறகு நாடோடிகள் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் சசிகுமார் உடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து நீங்க இன்னொரு படம் இருக்கு அதுல பண்ணுங்க என்று அவர் சொல்ல அதுக்காக உங்க முரட்டு தாடியை கொஞ்சம் எடுக்க வேண்டும் என்று சசிகுமார் கூறியுள்ளார். ஆனால் அதற்கு முதலில் ஜெயப்பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு இயக்குனர் பாண்டியராஜிடம் அவர் பசங்க திரைப்படத்தின் கதையை கேட்ட பிறகு தாடியை மட்டும் எடுக்கணுமா இல்ல முடியையும் சேர்த்து எடுத்துரட்டுமா என்று கேட்டுள்ளார். பிறகு தான் பசங்க திரைப்படத்தில் சொக்கலிங்கம் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் குடியேறினார். இந்த திரைப்படம் அவருடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்த ஜெயப்பிரகாஷ் இன்று தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.

Nanthini

Recent Posts

“இது தொல்லை தாங்க முடியல.. அழுத குழந்தையை சுவற்றில் வீசிய காதலன்”… அடுத்த நொடியே தாய் செய்த கொடூர செயல்… இறுதிச் சடங்கில் அம்பலமான பகீர் உண்மை.!

மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு,…

7 minutes ago

“உல்லாசமாக இருக்கலாம் வா…” இளம்பெண் வீசிய ஆசை வலை… ஓட்டு வீட்டுக்குள் நுழைந்த பைனான்சியருக்கு காத்திருந்த பகீர் அதிர்ச்சி…!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து…

14 minutes ago

“அன்னைக்கு செந்தில் பாலாஜி… இன்னைக்கு ஆதவ் அர்ஜுனா”… தவெக அமைச்சருக்கு செக் வைக்கும் திமுக…. உச்ச நீதிமன்றத்தின் அவசர முடிவு… பரபரப்பில் சென்னை…!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தவெக அரசு புதியதாகப் பதவியேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற…

16 minutes ago

“நான் கீழே குதிக்கப் போறேன்…” நள்ளிரவில் காதலனுக்கு வந்த கடைசி கால்… சென்னை ஐடி பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்…!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகளிர் விடுதி மாடியில் இருந்து குதித்து, 22 வயது இளம் ஐடி ஊழியர் தற்கொலை செய்து…

21 minutes ago

“திமுக-விற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி”….. முதல்வர் விஜய் கையில் இருக்கும் அந்த ’16 துறை’ ரகசிய பட்டியல்…. சட்டசபையில் வெடிக்கப்போகும் பாம்….!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான அரசியல் போர்க்களம் தற்போது "கட்சி நிதி" விவகாரத்தால் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.…

22 minutes ago

20 வருஷ பகை… 5 வயது குழந்தை என்றும் பார்க்காமல் நெல்லையில் நடந்த கொடூரம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ்…

28 minutes ago