78-ல் வெறும் 3 பேர் தான்… திமுகவின் ரகசிய ரிப்போர்ட்.. லண்டனில் இருந்து வந்ததும் சீட்டுக்களை கலைக்கும் ஸ்டாலின்… விஜய்யை ‘பீட்’ செய்ய களமிறங்கும் திமுக….!

Spread the love

திமுகவில் பட்டியல் சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் (மா.செ) பொறுப்பில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த கட்சித் தலைமை தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. தற்போது திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 78 மாவட்டங்களில் திருவள்ளூர் ரமேஷ், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ ராஜா மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.கணேசன் ஆகிய 3 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். இது வெறும் 3.8% மட்டுமே என்பதால், தற்போதைய அரசியல் சூழலில் இது கட்சிக்கு அமைப்பு ரீதியான பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று அறிவாலயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னணியில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியுள்ள சூழலில், பட்டியல் சமூக மக்களின் அங்கீகாரம் குறித்த பிம்பத்தைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், தமிழக வெற்றிக் கழகம் தனது நிழல் அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு (20%) வாய்ப்பளித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், விஜய்யின் இந்த அரசியல் வியூகத்தை முறியடித்து, தலித் மக்களின் நம்பிக்கையைப் பெற திமுகவும் ஆட்டத்தை அடித்து ஆடத் தொடங்கியுள்ளது.

இதன் முதற்கட்டமாக, திமுகவின் தற்போதைய 78 அமைப்பு மாவட்டங்களை 117 ஆக உயர்த்திப் பிரிக்க கட்சித் தலைமைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பிரிப்பின் அடிப்படையில், குறைந்தது 20 மாவட்டச் செயலாளர் பொறுப்புகளைப் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்க மு.க.ஸ்டாலின் யோசித்து வருகிறார். அண்மையில் நடந்த தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்த குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவுடன், இதற்கான அதிகாரப்பூர்வ பணிகள் வேகம் பெறும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

5 minutes ago

“அம்மாடியோ… 74 ஆண்டுகள் கழித்து வெளிவந்த பகீர் உண்மை… 52 உயிர்களைக் குடித்த… மாய விமானத்தின் பாகங்கள் மீட்பு…! 2,000 அடி அட்லாண்டிக் ஆழத்தில் அதிர்ச்சி காட்சி…!!”

1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…

10 minutes ago

“ஐயோ என்னடா இது… அங்கன்வாடி முட்டையை உடைத்த பெற்றோர்… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறித் துடித்த கொடூரம்…! தூத்துக்குடியில் பரபரப்பு…!”

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு…

10 minutes ago

“ஒரே புள்ளியில் இணைய வேண்டும்…” திமுக – பாஜக கூட்டணியா…? விமர்சனங்களுக்கு அமைச்சர் வன்னி அரசு அதிரடி பதில்…!!

திமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கப்போவதாக பரவி வரும் செய்திகள் குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான வன்னி…

11 minutes ago

“ஆடம்பர வாழ்க்கை… ஒரே நாளில் மரணம்…” ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… போலீசாரையே உறைய வைத்த அந்த கடிதம்… மைசூரில் குலை நடுங்க வைக்கும் சம்பவம்…

மைசூர் அருகே தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

22 minutes ago

தூத்துக்குடியில் காவல் மரணமா…? கைதான இளைஞர் உயிரிழந்ததால் கொதித்த உறவினர்கள்….! வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு மறுப்பு தெரிவித்த போலீஸ்…!!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கைது செய்யப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர்,…

26 minutes ago