நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த திமுகவிற்கு, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது உட்பட இந்த தேர்தல் முடிவுகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததாலும், திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாலும் தமிழகத்தில் விரைவில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் ஆதங்கத்தில் இருக்கும் திமுக, தங்களுக்குக் கிடைக்கவுள்ள இந்த இடைத்தேர்தல் வாய்ப்பைப் பயன்படுத்தி 5 தொகுதிகளையும் கட்டாயம் கைப்பற்றி மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. வழக்கமாக இருமுனைப் போட்டியாக இருக்கும் இடைத்தேர்தல் களம், இம்முறை மும்முனைப் போட்டியாக மாற வாய்ப்புள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் இந்த 5 தொகுதிகளும் ஏற்கனவே திமுக தோல்வியடைந்த தொகுதிகள் என்பதால், மு.க.ஸ்டாலின் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு கீழ்மட்ட நிர்வாகிகள் சரியாகப் பணியாற்றாததும், மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியும், தவெக மீதான மிகுந்த எதிர்பார்ப்பும்தான் காரணம் எனக் கருதப்படுவதால், இம்முறை அந்த தவறுகளைச் சரி செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்குத் தீவிரமாகப் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பழைய வேட்பாளர்களையே மீண்டும் களம் இறக்கலாமா அல்லது புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கலாமா என்று வேட்பாளர் தேர்வில் திமுக மும்முரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…