பள்ளி படிப்பை முடித்து இன்னும் கல்லூரியில் சேர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025 – 26 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மே மாதம் இறுதியில் தொடங்கப்பட்ட சேர்க்கை ஜூன் மாதத்தில் கலந்தாய்வு மூலம் நடைபெற்று முடித்தது.
மேலும் உயர்கல்வியில் அதிகமானவர்கள் சேருவதை உறுதி செய்ய, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சுமார் 15,000 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு கல்லூரி சேர முடியாமல் போன மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பை இதன்மூலம் உயர்கல்வித்துறை வழங்கியுள்ளது.
அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க https://www.tngasa.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, எந்தெந்த பாடப்பிரிவுகளில் இன்னும் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2025.
