ஹிந்தி மொழியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த புகழ்பெற்ற மராத்தி நடிகர் தான் ஆஷிஷ் வாராங்(55). துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. திரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கலாபவன் மணி கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்திருந்தார். இப்படியான நிலையில் இவர் இன்று திடீரென காலமானார். இவருடைய மறைவுக்கு அக்ஷய் குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
