எதிர்பார்க்காததை எதிர்பார்ப்பிங்க…. பிரம்மாண்ட நடிகர் & இசையமைப்பாளரோடு களமிறங்கும் இயக்குனர் மிஸ்கின்…!!

By admin on புரட்டாதி 15, 2023

Spread the love

இயக்குனர் மிஷ்கின் படங்களுக்கு பொதுவாக இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். தற்போது மிஸ்கின் இயக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

   

பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்தப் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி 50-வது படமாக மகாராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் .

   

முன்னதாக விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தில் இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மிஸ்கின், என்னுடைய இயக்கத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு விஜய் சேதுபதி பலமுறை வந்தார். அவரை நிராகரித்து விட்டேன். இப்போது அவர் பெரும் நடிகராக வளர்ந்து விட்டார். விரைவில் அவரை வைத்து படம் இயக்குவேன் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.