இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி லியோ படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் லியோ படத்தின் UK விநியோகஸ்ரான அகிம்சா என்டர்டெயின்மென்ட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது UK திரையரங்குகளில் லியோவின் uncut version- ஐ திரையிட உள்ளனர். UK திரையரங்குகளில் லியோவின் வெட்டப்படாத பதிப்பு திரையிடப்படும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் அங்கிருக்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பார்வையாளர்கள் லியோ படத்தின் அசல் வடிவத்தை பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜின் ஒரிஜினல் விஷனை மதிப்பதாக UK விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ஆரம்ப வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு பிறகு 12- A மதிப்பிடப்பட்ட லியோ பதிப்பு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

