‘என்ன பொசுக்குன்னு இப்படி ஆரம்பிச்சிடீங்க’… பிக் பாஸ் சீசன் 7 தொடங்கும் தேதியை அறிவித்த கமலஹாசன்… பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

By Begam on செப்டம்பர் 15, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக பிக்பாஸ் 7வது சீசன் தொடங்க இருக்கிறது. இரண்டு வீடு இந்த முறை புதியதாக வருகிறது அதோடு வேறென்ன விஷயங்கள் புதியதாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 6வது சீசனிற்கு ரூ. 70 கோடி வரை சம்பளம் வாங்கி கமல்ஹாசன் இந்த முறை ரூ. 130 கோடிக்கு சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே பிக்பாஸ் 7வது படு பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

   

தற்பொழுது இந்த சீசனில் பங்குபெறவுள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் யார் உறுதியாக வருவார்கள் என தெரியவில்லை.செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் 2வது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கலாம் என்று கூறப்பட்டு வந்தது

   

 

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 எப்பொழுது தொடங்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் அதிகாரபூர்வமாக அக்டோபர் 1 ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் துள்ளிக் குதித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…