போடு ரகிட ரகிட… இனி நாடு முழுவதும் 3 ஆம் வகுப்பு முதலே… பள்ளி மாணவர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்….!

By Nanthini on ஐப்பசி 31, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் AI செயற்கை தொழில்நுட்பம் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சில வருடங்களில் மனிதர்களுக்கு வேலையே இல்லை என்ற சூழல் உருவாகும் நிலை தான் தற்போது உருவாகியுள்ளது. இப்படியான நிலையில் நாடு முழுவது 3 ஆம் வகுப்பு முதலே AI பாடத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை AI அடிப்படை, விளையாட்டுத் திறன் பயிற்சி, 6 – 8 ஆம் வகுப்பு வரை சிறு ரோபோக்கள், Coding Blocks, Logical Games. 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை machine learning, data science, AI ethics, real world projects இடம்பெற உள்ளன. இதனால் மாணவர்களின் டிஜிட்டல் திறன் அதிகரிக்கும்.