சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த தமிழக முதலமைச்சர் விஜய், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார். முதலமைச்சர் சென்னை திரும்பிய நிலையிலும், தமிழக அமைச்சர்கள் பலர் தலைநகர் டெல்லியிலேயே முகாமிட்டு, மாநிலத்திற்குத் தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே டெல்லியில் உள்ள அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் தத்தம் துறை சார்ந்த சந்திப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அமைச்சர் ஜெகதீஸ்வரியும் டெல்லி சென்றுள்ளார். முன்னதாக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியைச் சந்தித்து கல்வி நிதியை விடுவிக்கவும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, இன்று (17.11.2026) பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
