முதல்வர் விஜய்-ஆ? ஸ்டாலினா? மேடையில் குழம்பிய அமைச்சர்.. பதறிப்போன தவெக நிர்வாகிகள்…. திடீரென மேடையில் நேர்ந்த ட்விஸ்ட்…!

Spread the love

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 52-வது பிறந்தநாள் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 59-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் மேலூரில் “போதை இல்லா தமிழகம்” மற்றும் “பெண்கள் பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி பிரம்மாண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த ஓட்டப் பந்தயத்தை, மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், வரலாற்றுச் சிறப்புமிக்க 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் அமைந்துள்ள 17 ஆவது சட்டமன்ற அமைச்சரவையில், 1967 மற்றும் 1977-க்குப் பிறகு, 2026ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக உள்ள தளபதி ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சி வழங்க வாழ்த்துகிறேன்” என்று கூறினார். முதல்வர் விஜய் என்பதற்குப் பதிலாக, ‘முதல்வர் தளபதி ஸ்டாலின்’ என்று அவர் வாய் தவறிப் பேசியது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமைச்சர் அவ்வாறு பேசிய அடுத்த கணமே, மேடையில் அருகில் இருந்த தவெக நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பதற்றமடைந்து, அவரிடம் “முதல்வர் விஜய்” என்று சுட்டிக்காட்டினர். உடனடியாகத் தனது தவறை உணர்ந்த அமைச்சர் விஸ்வநாதன், சமயோசிதமாகத் தனது பேச்சைத் திருத்திக் கொண்டு மீண்டும் உரையைத் தொடர்ந்தார். இருப்பினும், அமைச்சர் வாய் தவறிப் பேசிய இந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

முன்னதாக, இந்த விழா மேடையில் திராவிட மற்றும் தவெக அரசியல் நாகரிகங்களைத் தாண்டி, மற்றொரு சுவாரசியமான சர்ச்சையும் வெடித்தது. விழா மேடையில் ஒலிபரப்பப்பட்ட விஜய்யின் புகழ்பெற்ற சினிமா பாடல்களான ‘வாடி வாடி கைப்படாத சீடி’ மற்றும் ‘தளபதி கச்சேரி’ போன்ற பாடல்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் தவெக நிர்வாகிகள் சிலர் உற்சாகமாக மேடையில் நடனமாடினர். பொறுப்பான அமைச்சர் ஒருவர் தவெக நிர்வாகிகளுடன் இணைந்து சினிமா பாடலுக்கு நடனமாடியதும், தொடர்ந்து மேடையில் முதல்வர் பெயரை மாற்றிக் கூறியதும் இணையவாசிகளிடையே தற்போதைய ஹாட் டாப்பிக்காக நகர்ந்து கொண்டிருக்கிறது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

5 மணத்தியாலங்கள் ago