“ஒரே புள்ளியில் இணைய வேண்டும்…” திமுக – பாஜக கூட்டணியா…? விமர்சனங்களுக்கு அமைச்சர் வன்னி அரசு அதிரடி பதில்…!!

By Devi Ramu on ஆடி 23, 2026

Spread the love

திமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கப்போவதாக பரவி வரும் செய்திகள் குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான வன்னி அரசு தெளிவுபடுத்தியுள்ளார். பாஜகவை எதிர்ப்பதில் திமுக இன்னமும் உறுதியான நிலைப்பாட்டிலேயே இருந்து வருவதாக தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் திமுகவின் செயல்பாடுகள் மூலமே அவர்களின் தெளிவான போக்கை நாம் புரிந்துகொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

பாஜகவை எதிர்க்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரே புள்ளியில் இணைய வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் தொலைநோக்குப் பார்வை என்று அவர் தெரிவித்தார். மேலும் தவெக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாணவர்களின் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள சூழலில் இந்த பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை திமுக தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.