“மே 4 முதல் ரகசிய பேரம்”…. தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி?…. அமைச்சர் ஷாஜகான் வெடி குண்டு தகவல்…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

Spread the love

நெல்லை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், தவெக தலைமையிலான சமூக நீதி வெற்றிக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அரசின் பல்வேறு சாதனைகளையும், தற்போதைய அரசியல் சூழல்களையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார். சிறுபான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கபர்கஸ்தான் மற்றும் கல்லறைத் தோட்டம் அமைப்பதற்காக 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 9,000 கொலைகள் நடைபெற்றதைச் சுட்டிக்காட்டினார். அத்தகைய கவலைக்குரிய சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு தமிழக முதல்வர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார். மேலும், கொலைக் குற்றங்களுக்கு போதைப்பழக்கமே முக்கியக் காரணமாக அமைகிறது என்றும், மதுக்கடைகள் திறக்கப்பட்டதே தற்போதைய நிலைக்குக் காரணம் எனவும் குறிப்பிட்ட அவர், மது மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் தடுக்கக் கால அவகாசம் மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தேவை என்றார்.

சமீபத்தில் எழுந்த பல்வேறு சர்ச்சை விவகாரங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் மட்டுமே பேசப்பட்டு வருவதாகவும், தவறு நிரூபிக்கப்பட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார். அதேபோல் துறையூர் எம்.எல்.ஏ தொடர்பான வீடியோ பின்னணியிலும், பெரியார் நூலகப் புத்தகங்கள் விவகாரத்திலும் உள்நோக்கம் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார். கடந்த ஆட்சியில் ஆர்டர் கொடுக்கப்பட்ட புத்தகங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகளா அல்லது ஊழலா என்பதை அறிய அனைத்து நூலகங்களிலும் ஆய்வுகள் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனில் அரசு காட்டும் அக்கறையைக் குறிப்பிட்ட ஷாஜகான், மதம் மாறிய இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரத்தை ஆய்வு செய்ய தனிக் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தலித் மக்களின் சான்றிதழ் சார்ந்த சிக்கல்களும் முதலமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறுதியாக, ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் சதித்திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், தேர்தல் முடிவுகள் வெளியான மே 4 முதல் பல்வேறு பேரங்கள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். தவெக ஆட்சி அமைந்த பிறகும் சில கட்சிகள் இணைந்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன; இருப்பினும் நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையையும் முதல்வர் முறியடிப்பார் என்று திட்டவட்டமாகக் கூறினார். 6 மாத கால ஆட்சி வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகளை மேலும் சிறப்பாகத் தொடர எம்.எல்.ஏ-க்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் கூறி முடித்தார்.

Nanthini

Recent Posts

டேய்… வண்டிய நிறுத்துடா… அலறியும் நிறுத்தாமல் போலீசை 200 மீட்டர் இழுத்துச் சென்ற… போலி நம்பர் பிளேட் கார்… நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்…!

மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள கலம்போலி பகுதியில், வழக்கமான வாகனத் தணிக்கையின் போது அதிவேகமாக வந்த சுவிஃப்ட் டிசையர் கார்…

3 minutes ago

சாகசம் இப்படியா முடியும்?… 56 மீட்டர் உயர கிரேன்… வானில் பறந்தபோது நேர்ந்த விபரீதம்… மின்கம்பியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய ரஷ்ய வீரர்…!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் வான்வழியே பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கு…

5 minutes ago

ஐயோ… கடவுளே… வீட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் நடந்த கொடூரம்… மயக்க மருந்து கொடுத்து விற்கப்பட்ட 15 வயது சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

பாகல்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் ஏற்பட்ட கோபத்தில் வயல்வெளிக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, ராஜஸ்தானில் 34 வயது நபருக்கு…

11 minutes ago

திக் திக் நிமிடங்கள்!… ரயில் சேவை முடக்கம்… நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தப்பியது எப்படி?… நடுக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி–ஹவுரா வழித்தடத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் போது எதிர்பாராத விதமாக திடீரென…

14 minutes ago

அம்மா இல்லாத வலி எனக்குத் தெரியும்… உன்னை நான் பார்த்துக்கிறேன்… சோசியல் மீடியாவை உருகவைத்த பஞ்ச் குரங்கின் பாசம்… வைரல் வீடியோ…!!

ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் பிறந்த 'பஞ்ச்' என்ற ஜப்பானிய மக்காக் குட்டிக்குரங்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

19 minutes ago

போலீஸுக்கே சவாலா?… எச்சரித்தும் கேட்காத அராஜகம்… நடுரோட்டில் வெடித்த மோதல்… போலீஸ் முன்னாடியே ஆக்ரோஷம்… நடந்தது என்ன?…!!

ஹரித்வாரில் உள்ள கட்கடி மற்றும் ராம்கர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிலர் கடுமையாக வாக்குவாதம் செய்து ஒருவரையொருவர்…

25 minutes ago