ஐயோ… இங்க இருந்த மலையை காணோம் சார்… சுரண்டிட்டாங்க போலயே… சட்டசபையை அதிர வைத்த அமைச்சர் பிரபுவின் வைரல் பட்டியல்…!

By Swetha on ஆவணி 26, 2026

Spread the love

தமிழ்நாட்டில் கடந்த கால் நூற்றாண்டுகளில் கனிமவளக் கொள்ளை காரணமாக சட்டவிரோதமாக வெட்டித் தகர்க்கப்பட்டு, முற்றிலுமாக மாயமான மலைகளின் அதிகாரப்பூர்வ பட்டியலை கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டுள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நீண்டகால குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் செய்தி, மாநிலத்தின் இயற்கை வளப் பாதுகாப்பு குறித்த தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளது.

பெரம்பலூர் எளம்பலூர் பிரம்மரிஷி மலை, கோனேரிப்பாளையம் மலை, செங்குணம் மலை மற்றும் மதுரை கீழவளைவு சர்க்கரைப்பெருமலை, கொண்டையம்பட்டி குன்று உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், திருப்பத்தூர் ஆம்பூர்பேட்டை, ராணிப்பேட்டை அனந்தலை மலை, கோவை முத்தூர் குன்றுகள் மற்றும் தென்காசி கோணமலை போன்ற பல மலைகளும் வெவ்வேறு ஆண்டுகளில் பெருமளவில் சுரண்டப்பட்டு தன் அடையாளத்தை இழந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

சுரங்க விதிகளுக்குப் புறம்பாக பல ஏக்கர் பரப்பளவில் மலைகள் வெட்டி அழிக்கப்பட்டிருப்பது மாநிலத்தின் சுற்றுச்சூழல் சமநிலைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இந்த அதிரடியான பட்டியல் வெளியீடு மூலம், இயற்கை வளங்களைச் சூறையாடும் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.