கடவுளே இப்படியா ஆகணும்…? வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. சரிந்து விழுந்த மூட்டைகள்…. பதைபதைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஆவணி 26, 2026

Spread the love

குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதியில் உள்ள ஒரு வேளாண் தானியக் கிடங்கில்அடுக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட தானிய மூட்டைக் கூம்பல் திடீரென சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அங்குப் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் மீது அடுக்கடுக்காகத் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்ததில், பல தொழிலாளர்கள் அதன் அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் ஒரு தொழிலாளி மட்டும் அதிர்ஷ்டவசமாக உடனடியாக வெளியே தப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

தானிய மூட்டைகளின் அடியில் சிக்கியுள்ள மற்ற தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருவதோடு, கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.