மகளிருக்கு செம குட் நியூஸ்… வட்டி தளர்வுடன் ரூ 500 கோடி கடன் வழங்கும்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!!

By Swetha on ஆவணி 26, 2026

Spread the love

தமிழக அரசு மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்’ மூலம் ரூ.500 கோடி கடன் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோர்களுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் வகையில், வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.20 சதவீதத்தில் இருந்து 9.95 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்களால் நிர்வகிக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நேரடியாகப் பயனடைய உள்ளன.

இந்த நிதி உதவியும் வட்டி குறைப்பும் தமிழகத்தில் பெண்களின் வணிக வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதுடன், மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பெரிதும் உதவும். மேலும், இந்த திட்டத்தின் செயல்பாடுகள் மூலம் 3,500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏராளமான பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, சமூகத்தில் அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் மேம்படுத்த வழிவகுக்கும்.