தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுகவில் இருக்கும் அமைச்சர் புதிய சிக்கலில் மாட்டியுள்ளது கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை பணி நீயமான மோசடியில் அமைச்சர் கே என் நேரு அவரது சகோதரர்களின் உதவியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ED குற்றம் சாட்டியுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே உறுதி செய்த பட்டியல் உதவியாளர்களின் whatsapp உரையாடலில் மீட்கப்பட்டதாகவும், ஹவாலா பரிமாற்றத்திற்காக பயன்படுத்திய பத்து ரூபாய் நோட்டின் படங்களை whatsapp-ல் பரிமாறிக் கொண்டதாகவும் ED கூறியுள்ளது. இதனால் அமைச்சர் கே என் நேரு மீது சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என தெரிகிறது. இந்தச் செய்தி முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
