அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கால்நடை மருத்துவரின் மகளான ஜோ ரோஷன்பெர்க் என்பவர் வசித்து வருகிறார். 40 ஏக்கரில் பூனை, நாய் என வளர்ப்பு விலங்குகளுக்கும் மத்தியில் வளர்ந்த ஜோ விலங்கு நல ஆர்வலரான வேலை பார்த்து வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜோ தனது நண்பர்களுடன் அருகே இருக்கும் கோழி பண்ணைக்கு சென்றுள்ளார். பண்ணை ஊழியர் போல வேடமிட்டு உள்ளே நுழைந்த ஜோ ஆயிரக்கணக்கான கோழிகளில் இருந்து இருந்து 4 கோழிகளை மட்டும் மறைத்து வெளியே எடுத்து வந்தார்.
இதனையடுத்து அந்த கோழிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் அவை வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதும் காயங்கள் சிராய்ப்புகளால் அவதிப்படுவதும் தெரியவந்தது. இந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நிலையில் கோழிப்பண்ணைக்குள் புகுந்து திருடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
