நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் மோசடி நடந்துள்ளதாக ED கூறியுள்ளது. இது செந்தில் பாலாஜி, பொன் முடியை போன்று அமைச்சர் கே என் நேருவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் கே என் நேரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகின்றன. இதனால் தற்போது தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
