அடுத்த பரபரப்பு… விஜய்யை கைது செய்வோம்… அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்…!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நீதிமன்றம் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டது. அதே சமயம் தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதனிடையே நேற்று கரூர் சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது விஜய்க்கு எதிராக நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யும் நிலை வந்தால் விஜய் கைது செய்யப்படுவார் என்றும் அனாவசியமாக யாரையும் கைது செய்ய மாட்டோம் என்றும் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது