தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதில் அளித்து உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “சௌமியா மேடம் கொஞ்சம் தர்மபுரியை விட்டு வெளியே வாங்க… பக்கத்தில் திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி எனப் பல மாவட்டங்கள் இருக்கின்றன.
மேடம் இருக்கும் எல்லா அரசுத் திட்டங்களையும் தர்மபுரிக்கு மட்டுமே கொண்டு செல்லப் பார்க்கிறார்” என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார். அமைச்சரின் இந்தச் சுவாரஸ்யமான பதிலைக் கேட்டுச் சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த உறுப்பினர்களிடையே பலத்த சிரிப்பலை எழுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
