“அன்பாக வளர்த்த செல்ல கழுதையை சுட்டுக்கொன்ற கொடூரம்…” அமெரிக்காவில் போலீசார் செய்த காரியம்.. நிதி திரட்டும் தளத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் குவிந்த உதவி… அதிர்ச்சி சம்பவம்..!!

By Devi Ramu on புரட்டாதி 3, 2026

Spread the love

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் ‘ஹீ-ஹா’ என்ற குட்டி ஆண் கழுதையைத் தங்களது செல்லப் பிராணியாக மிகவும் அன்புடன் வளர்த்து வந்தனர். இந்நிலையில், நள்ளிரவு 12:45 மணியளவில் காணாமல் போன ஒரு சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஹன்னாவின் பண்ணை நிலத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்நிய நபர்களின் நடமாட்டத்தை உணர்ந்த குட்டிக் கழுதை ‘ஹீ-ஹா’ சத்தம் போட்டபடி அவர்களை நோக்கி வந்துள்ளது. இதனால் அச்சமடைந்ததாகக் கூறி, அங்கிருந்த அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு அந்த செல்லக் கழுதையை சம்பவ இடத்திலேயே கொடூரமாகக் கொன்றார்.

தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்பட்ட செல்லப் பிராணியைப் போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அக்குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து சட்டப் போராட்டம் நடத்த அந்தப் பெண் இணையத்தில் நிதி திரட்டிய நிலையில், குறுகிய காலத்தில் 35,000 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சத்திற்கு மேல்) மேல் மக்கள் உதவி வழங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், மேலும் இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.