“வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல…” பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பெண் பேராசிரியர்… ஐஐடி மும்பையில் அரங்கேறிய அசத்தல் நிகழ்வு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 3, 2026

Spread the love

மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார நிகழ்ச்சியில் பாலிவுட் பாடலுக்கு மிக நளினமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மூத்த விஞ்ஞானியான பேராசிரியர் ருசி ஆனந்த், வகுப்பறைகள் மற்றும் ஆராய்ச்சிக்கூடங்களைத் தாண்டி ‘பத்மாவத்’ திரைப்படத்தின் “நைனோவாலே நே” என்ற பாடலுக்கு பாரம்பரிய உடையில் அழகாக நடனமாடி தனது கலைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

   

https://www.instagram.com/reel/DctnR80Ms6I/?utm_source=ig_web_copy_link&igsi=NTc4MTIwNjQ2YQ==

   

“வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல; பொழுதுபோக்குகளும் முக்கியம்” என்ற தத்துவத்திற்கு ஏற்ப வாழும் இவரது இந்த நடனத்தைப் பார்த்த நெட்டிசன்கள், ஒரு மூத்த பேராசிரியராகவும் விஞ்ஞானியாகவும் இருந்துகொண்டே தனது கலை ஆர்வத்தைத் தொடரும் அவருக்குத் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.