பால் வியாபாரி ஒருவர் பாலில் எச்சில் துப்பும் காட்சி கேமராவில் சிக்கியது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் முகமது ஷரீப் என்பவர் பால் விநியோகம் செய்து வருகின்றார். இப்படியான நிலையில் லாவ் சுக்லா என்பவருடைய வீட்டுக்கு அவர் பால் விநியோகம் செய்த நிலையில் பால் பாத்திரத்திற்குள் எச்சில் துப்பி உள்ளார். தற்செயலாக சிசிடிவி கேமராவில் இந்த காட்சியை கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் போலீஸ் சாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே அந்தப் பால் வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். உத்திரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் கரும்புச்சாறு விற்கும் ஒருவர் கரும்புச்சாற்றில் சிறுநீர் கழித்தது, ரொட்டி தயாரிக்கும் ஒருவர் ரொட்டியில் எச்சில் துப்பியது என பல விஷயங்கள் உணவு பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது தூய்மையான பாலில் வியாபாரி எச்சில் துப்பிய சம்பவமும் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Breaking 🚨 Milkman Pappu aka Md Sharif caught on CCTV spitting into milk before delivering it to a Hindu house in Lucknow 👀
After he rang the bell, he looked around and then spit into the can.
Sharif has veen ARRESTED. pic.twitter.com/rjMAenaq8J pic.twitter.com/i3C4lgCJPu
— Hopes (@Hopes_times) July 6, 2025
