மாமியாரை தரதரவென இழுத்து வந்து அடித்து உதைத்த மருமகள்.. படம் பிடித்த தாய்.. பதற வைக்கும் வீடியோ..!

By Nanthini on ஆடி 8, 2025

Spread the love

பெண் ஒருவர் தன்னுடைய மாமியாரை பந்தாடும் காட்சிகளை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள Ghaziabad என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவன் மனைவி அகன்ஷா  அந்தாரிக்ஷ் இருவருமே மென்பொருளாளர்கள். அந்தப் பெண் தன் மாமியாரை அடிக்கும் காட்சிகளை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதனை அகன்சாவின் தாயார் வீடியோ எடுத்துள்ளார். அதனை அகன்சாவின் மாமியார் தடுக்க முயல மாமியாரை அகன்சா அரைகின்றார். அடி தாங்காமல் மாமியார் தப்பியோட இன்னொரு வீட்டுக்கு சென்று உதவி கேட்க அங்கிருந்து அவரை இழுத்து வந்து அவர் கீழே விழுந்த நிலையிலும் அவரை கடுமையாக அகண்ஷா தாக்குகின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.