Categories: சினிமா

தலைல தொப்பி இல்லனா எம்.ஜி.ஆர்-ன்னு கூப்பிட மாட்டீங்களா? நிருபரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த எம்.ஜி.ஆர்

Spread the love

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக்க வந்து பின் நடிப்பின் உச்சத்திலும், அரசியலிலும் மேலோங்கியிருந்த காலகட்டம் அது. அனைவரிடமும் எளிதில் பழகக்கூடிய எம்.ஜி.ஆர். வேறுபாடு பார்க்காதவர். அதனால் தான் அவரை இன்றளவும் பொன்மனச் செம்மல், ஏழைகளின் நாயகன் என்றெல்லாம் புகழ்கிறோம். தான் சம்பாதித்ததில் பெரும்பகுதியை ஏழைகளின் நலனுக்காகவும், இல்லையென்று வந்தோர்க்கு வாரிக் கொடுத்த கலியுகக் கர்ணனாகவும் திகழ்ந்தவர். எம்.ஜி.ஆரை ஒரு முறை நிரூபர் ஒருவர் பேட்டி கண்ட போது, நடந்த சுவாரஸ் கேள்வி பதில்தான் இது.

அதுவரை தொப்பி அணிந்திராத எம்.ஜி.ஆர் வெள்ளைத் தொப்பி ஒன்றை அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இத்தொப்பி அணிவதன் காரணம் குறித்து நிருபர் கேள்வி கேட்க, அதற்கு எம்.ஜி.ஆரோ “

அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்’ என்றார். அப்படித்தான் இந்த தொப்பி அணியும் பழக்கம் வந்தது. பின்னாளில் தேர்தல் வந்ததால். பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்.

ரஜினி, கமலின் தூக்கம் தொலைய வைத்த நடிகர் ராமராஜன்.. வெள்ளந்தி நடிப்பால் திரையுலகை ஆண்ட ஹீரோ

வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே என நிருபர் கேட்க,அதற்கு எம்.ஜி.ஆர். “தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்?

யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு’ என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்.” என்று சற்று காட்டமாக அந்த நிருபருக்கு பதிலளித்தார் மக்கள் திலகம்.

admin

Recent Posts

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

2 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

19 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

38 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

49 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

1 மணத்தியாலம் ago