தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.
எம் ஜி ஆருக்கு நடிப்பு மட்டும் இல்லாமல் சினிமாவின் சகலதுறைகளிலும் அறிவு இருந்துள்ளது.குறிப்பாக பாடலை தேர்வு செய்வதில் அவர் அபாரமான அறிவைப் பெற்றிருந்ததாக அவரோடு பணியாற்றியவர்கள் சொல்வார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அவரின் பாடல்களும் ஒரு முக்கியக் காரணம் என சொல்லலாம்.
தன்னுடைய கருத்துகளை சொல்வதற்குப் பாடல்களை அவர் பயன்படுத்திக் கொண்டது போலவே, இனிமையான காதல் பாடல்களையும் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட கொடுத்துள்ளார். எம் ஜி ஆரின் ஆஸ்தான பாடல் ஆசிரியர்களில் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மற்றும் வாலி வரிசையில் இணைந்தவர் புலமைப் பித்தன்.
தமிழாசிரியரான இவர் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் பாடல் எழுதவந்தார். அப்போது அவருக்கு எம் ஜி ஆரோடு பழக்கம் ஏற்பட்டு அவர் படங்களுக்கு அதிக பாடல்களை எழுதினார். அப்போது ஒரு படத்துக்கு அவர் எழுதிய பாடலை எம் ஜி ஆர் வரிகள் சிறப்பாக அமையவில்லை என நிராகரித்துவிட்டாராம்.
அந்த பாடலை சிவாஜியின் ஒரு படத்துக்கு அந்த பாடல் பொருந்தியதால் அதைப் பயன்படுத்திக் கொண்டாராம். இந்த தகவலைக் கேள்விப்பட்ட எம் ஜி ஆர், தனக்காக எழுதிய பாடல் சிவாஜிக்கு போய்விட்டதே என வருத்தப்பட்டாராம். அந்த பாடலை தன்னுடைய வேறு படத்தில் பயன்படுத்தலாம் என நினைத்திருந்த நிலையில் பாடல் போய்விட்டதே என வருத்தப்பட்டுள்ளார். அப்படி அவர் மிஸ் செய்த பாடல்தான் ‘அது தான் ‘இனியவளே என்று பாடி வந்தேன். இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்…’ என்ற ஹிட்பாடல்.